2025 ஜூலை 02, புதன்கிழமை

நந்திக்கடல், நாயாறு ஆகியவற்றை ஆழமாக்கி தருமாறு கோரிக்கை

Niroshini   / 2016 ஜூன் 07 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவின் நந்திக்கடல், நாயாறு என்பவற்றை ஆழமாக்கித் தருமாறு முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலையினால் பெருமளவு கழிவுப் பொருட்கள் நந்திக் கடலிலும் நாயாற்றிலும் நிறைந்துள்ளன. இதனால், இறால், மீன் பெருக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நந்திக் கடலினையும் நாயாற்றினையும் ஆழமாக்குவதன் மூலம் கடற்றொழிலாளர்களின் தொழில் வளம் அதிகரித்து வாழ்வாதாரம் பலம் பெறுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக கடந்த 02ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் ஆழமாக்குதல் தொடர்பாக கடற்றொழிலாளர்கள் பிரதிநிதிகளினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

நந்திக்கடல், நாயாறு என்பவற்றின் வழியாக கடந்த டிசெம்பர் மாதத்திலும் தற்போது பெய்த அடை மழையினாலும் பெருமளவு வெள்ளம் பெருங்கடலை அடைந்ததன் காரணமாக இறால், மீன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .