Niroshini / 2020 ஒக்டோபர் 15 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-விஜயரத்தினம் சரவணன், சுப்பிரமணியம் பாஸ்கரன், செ.கீதாஞ்சன்
கடற்றொழில் அமைச்சின் இரண்டு இலட்சம் ரூபய் நிதி ஒதுக்கீட்டின் கீழ், முல்லைத்தீவு - நந்திக்கடல் ஆழப்படுத்தல் வேலைத்திட்டத்தின் முதற்கட்டப்பணிகள், நேற்று (14) ஆரம்பிக்கப்பட்டன.
மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் பணிகளில், முதற்கட்டப் பணியாக, நீர் வழிந்தோடுகின்ற பகுதிகளில் தேங்கிக் காணப்படும் கற்கள் மற்றும் பாசி போன்றவற்றை அகற்றுகின்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதையடுத்து, இரண்டாவது கட்டமாக வட்டுவாகல் பாலத்தின் வலப்பக்கமாக இரண்டு கிலோமீற்றரும் இடப்பக்கம் ஒரு கிலோமீற்றருமாக ஆற்றிலுள்ள சேறு அகற்றப்படவுள்ளது.
மூன்றாம் கட்டமாக, மேலும் இரண்டு கிலோமீற்றர் அகழப்படுத்தும் பணி முன்னெடுக்கப்படும்
இதன் முதற்கட்டப்பணியை, மாவட்டச் செயலாளர் க.விமலநாதன், மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரி, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி, வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் இணைந்து ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
30 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
4 hours ago