2025 மே 17, சனிக்கிழமை

‘நாட்டுக்கு நல்லாட்சியை வழங்க ரணிலும் சஜித்தும் ஒன்றுபட அழைக்கின்றோம்’

Editorial   / 2020 மார்ச் 16 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

நாட்டுக்கு நல்லாட்சியை வழங்க ரணிலும் சஜித்தும் ஒன்றுபட அழைப்பு விடுக்கின்றோமென, முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார்.

வவுனியா அருந்ததி மண்டபத்தில், சனிக்கிழமை (14) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் கூடி முடிவெடுத்ததன் பிரகாரம், அனைத்து இனத்தவரையும் பிரதிபலிக்கின்ற பல கட்சிகள் ஒன்று சேர்ந்து ஐக்கிய மக்கள் முன்னணி என்ற பெரும் சக்தியாக இந்த தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் கூறினார்.

இன, மத பிரிவு அற்ற அனைவரும் ஒற்றுமையாக வாழும் சூழலை ஏற்படுத்துவது தனது எதிர்பார்ப்பாகுமெனத் தெரிவித்த அவர், அந்த வகையில் ஐக்கி தேசியக் கட்சி இரண்டாக பிளவுபட்டு நிற்பதென்பது அவர்களது கட்சி ஆதரவாளர்களுக்கு அவர்கள் செய்யும் அநியாயமாகுமெனவும் கூறினார்.

எனவே, இந்நிலையில் இருசாராரும் ஒன்றுபட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் சஜித் பிரேமதாஸ தலைமையிலான கூட்டமைப்பிலே கலந்துகொள்வதுதான் சாலச்சிறந்ததாக இருக்குமெனவும், அவர் தெரிவித்தார்.

அதனூடாகத்தான் அதிக ஆசனங்களை பெறமுடியுமெனவும் அதனூடாகவே ஆட்சி அமைக்க முடியுமெனவும், அவர் கூறினார்.

எனவே, அவ்வாறு நல்ல சூழல் இருக்கின்ற போது அதனை விடுத்து, பிரிந்துநின்று கேட்டு வாக்கை சிதறடிப்பதானது அவர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கும் நாட்டிற்கும் செய்யும் அநியாயமாகுமெனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .