Princiya Dixci / 2021 பெப்ரவரி 03 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்
இராணுவத்தை தாம் சுடவில்லை; தம்மை நோக்கி இராணுவமே துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக, செட்டிகுளம் துப்பாக்கி சூட்டுசம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா - செட்டிகுளம், பேராறு காட்டுப்பகுதியில், நேற்று (02), இராணுவத்தின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன் ஒருவர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அத்துடன், சம்பவம் இடம்பெற்ற போது, குறித்த இளைஞனுடன் இருந்த இரண்டு இளைஞர்கள், அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
இந்நிலையில், இராணுவத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமையால் தான், அவ்விளைஞர்கள் மீது இராணுவத்தினர் மீண்டும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு, இன்று (03) தெரிவித்திருந்தது. எனினும், தாம் அவ்வாறு துப்பாக்கிகள் எதனையும் வைத்திருக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் மரங்களை அறுப்பதற்காகவே காட்டுப்பகுதிக்குச் சென்றதாகவும் மீண்டும் வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே, இராணுவம் திடீர் என்று தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அவ்விளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
6 minute ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 Nov 2025
15 Nov 2025