2025 மே 01, வியாழக்கிழமை

நாவல்காட்டில் அகழ்வு பணி

Niroshini   / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - முள்ளியவளையில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பகுதியில் இனங்காணப்பட்ட மனித உடல் பாகங்களை மீட்கும் பணிகள், நீதிமன்ற அனுமதியுடன், இன்று (31) முன்னெடுக்க்பபட்டன.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற பதில் நீதிபதி ந.சுதர்சன் முன்னிலையில், குறித்த அகழ்வு மற்றும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

தடயவியல் நிபுணர்கள், பொலிஸார், சட்ட வைத்திய அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இணைந்து, குறித்த உடற்பாகங்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, அவ்விடத்தில் இருந்து, உடல்பாகங்களாக மீட்கப்பட்டவர் அணிந்திருந்த நைலோன் சாரம் - ஒன்று நிறம் தெரியாத நிலையில் காணப்படுவதோடு, அவர் அணிந்திருந்த சிவப்பு மற்றும் நீல நிறம் கலந்த Nயுருவுஐஊயு என பொறிக்கப்பட்ட ரீ சேட், பாதணிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த நபருடைய ஒரு கை பாகங்களை காணவில்லை என அறியமுடிகிறது.

இந்தப் பொருள்களைக் கொண்டு,  குறித்த நபரை அடையாளம் காணக்கூடிய நபர்கள் யாரும் இருந்தால,; முள்ளியவளை பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், முள்ளியவளை பொலிஸ் பிரிவில் யாரும் காணாமல் போனதாக முறைப்பாடுகள் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் உடல் பாகங்கள் காணப்பட்ட பகுதியை  சூழ பாரிய மரக்கடத்தல் இடம்பெற்றதற்கான சான்றுகள் காணப்படுகின்ற நிலையில், குறித்த உடற்பாகங்கள், மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களுடையதாக இருக்கலாம் என்று ஏற்கெனவே சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்தும் சிலர் வருகைதந்து, மரம் அறுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் இந்நிலையில், அவ்வாறு வருகைதந்தார்களில் யாராவது கொலை செய்யப்பட்டு, கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் வலுப்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .