Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-விஜயரத்தினம் சரவணன்
சர்வதேச விசாரணைகளில் யுத்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், இலங்கை அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலக முற்படுவதாகத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா, அவ்வாறு அவர்கள் நினைத்தவுடன் விலகுவதற்கு இது ஒன்றும் அவர்கள் வீட்டுக் கல்யாணம் இல்லையெனவும் கூறினார்.
முல்லைத்தீவு - மாந்தைக் கிழக்குப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் காரியாலயத்தை, இன்று (24) திறந்துவைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இன்றும் தாம் அபிவிருத்தி என்பதைத் தாண்டி, தமது தமிழர்கள் தன்மானத்துடனும் சுயமரியாதையோடும் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காகவே போரடிவருகின்றோமெனத் தெரிவித்தார்.
யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்பவற்றுக்கு, இலங்கை அரசாங்கம் பரிகாரம் தேட மறுத்துவிட்டதெனக் குற்றஞ்சாட்டிய அவர், போர்க் குற்றங்கள், மனிதப் படுகொலைகள் இங்கு இடம்பெற்றருக்கின்றன என்பது சர்வதேச விசாரணை ஊடாக நிரூபிக்கப்பட்டதன் பின்னர், இன்றைய அரசாங்கம் அதிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் சாடினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
6 hours ago