2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

நினைவிடம் தகர்ப்பு: ’சுரேனுக்கு தொடர்பு’

Niroshini   / 2021 ஜனவரி 10 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவிடம் உடைக்கப்பட்டமைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனின் கருத்துகளுக்கும் இடையில் நேரடி தொடர்புகள் உள்ளன என, நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

இன்று (10) ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தனித்துவமாகவும் தமது அடையாளங்களுடனும், தமிழர்கள் இலங்கையில் வாழ முடியாது என்பதற்கு மிகப்பெரிய ஓர் உதாரணமாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் உடைக்கப்பட்ட சம்பவம் அமைந்துள்ளதென்றார்.

அத்துடன், அரசாங்கத்தின் கட்டளைக்கு அமைவாக, இராணுவத்தின் உதவியுடன், பல்கலைக்கழக துனைவேந்தரின் ஆலோசனைக்கு அமைவாக, வெள்ளிக்கிழமை (08) இரவு, இந்த நினைவிடம் இடிக்கப்பட்டுள்ளதெனவும், அவர் கூறினார்.

'ஒட்டோபா சட்ட சபையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை ஒரு சட்டமாக கொண்டுவருவதற்கு, விஜய் தனியாசனம் என்பவர் முன்மொழிந்துள்ளார். இந்நிலையில், அதனை நிறைவேற்றக்கூடாது என்ற கருத்தை, கடந்த நாடாளுமன்றத்தில், வடக்கு மாகாண முன்னாள் ஆளுநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் முன்வைத்தார்.

'அவர் பேசிய ஒரு வார காலத்தினுள், இந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்து அழிக்கப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்த வரையில் இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவிடம் உடைக்கப்பட்டமைக்கும் சுரேன் ராகவன் இவ்வாறு முன்மொழிந்து பேசியதற்கும் இடையில் நேரடி தொடர்புகள் உள்ளதாகவே கருதுகின்றேன்' எனவும், சார்ள்ஸ் எம்.பி கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .