2025 மே 01, வியாழக்கிழமை

நினைவு நாள் நிகழ்வு

Niroshini   / 2021 ஜனவரி 06 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

படுகொலைசெய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 36ஆவது ஆண்டு நினைவு நாள், இன்று (06) நினைவுகூரப்பட்டது.

இதையொட்டி, காலை 6 மணியளவில், வங்காலை புனித ஆனால் தேவாலயத்தில், மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்ணான்டோ ஆண்டகை தலைமையில், விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அதை தொடர்ந்து, தேவாலய வளாகத்தில் அமைந்துள்ள அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் சிலைக்கு முன்னால், நினைவு நிகழ்வு நடைபெற்றது,

அத்துடன், அருட்பணி மேரி பஸ்ரியன் சமூக முன்னேற்றக் கழகத்தின் ஏற்பாட்டில், இரத்த தான நிகழ்வு நடைபெற்றது.

இரத்த தான நிகழ்வைத் தொடர்ந்து, தேவையுடையவர்களுக்கு உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .