2025 மே 22, வியாழக்கிழமை

நினைவேந்தலை நடத்தத் தீர்மானம்

Editorial   / 2019 மே 04 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

இறுதிப்போரில் உயிரிழந்த மக்களின் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மே 18ஆம் திகதின்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடத்துவதற்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, இந்த குழுவுக்கான முழுமையான ஆதரவை, கரைதுறைப்பற்று பிரதேச சபை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவுக்கும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் மற்றம் உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு, நேற்று (03) கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

 இதன்போதே, மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் , தற்போது நாட்டில் இருக்கின்ற அவசர கால நிலமையில், முள்ளிவாய்க்கால் நிகழ்வை நடத்துவதற்கு பாதுகாப்பு பிரச்சினைகள் இருக்கின்றன. அது தொடர்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினர் படை அதிகாரிகளுடனும் பொலிஸ் அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசித்துக்கொண்டு இருக்கின்றார்கள். அதன் முடிவைப் பெற்று நிகழ்வினை நடத்துவதற்கான சகல ஏற்படுகளையும் மேற்கொண்டு நிகழ்வினை நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X