2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நியமனம் கோரி ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2021 ஜூன் 23 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

தகமைப் பாராது சேவைக் கால அடிப்படையில், நியமனம் வழங்குமாறு கோரி, சுகாதாரத் தொண்டர்களால், வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்னால், இன்று (23) காலை 9.30 மணிக்கு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்துரைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள், 2017, 2018ஆம் ஆண்டுகளில், நியமனம் கோரி 120 நாள்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டதன் விளைவாக, 2019.05.27, 2019.09.29 அன்று நேர்முக தேர்வு நடத்தப்பட்டு வழங்கப்பட்ட நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டன என்றனர்.

'தற்போது எமது நியமனங்களில் கவனம் செலுத்தாது, 1 இலட்சம் வேலைவாய்ப்பினூடாக எமது சுகாதாரத் தொண்டர் பட்டியலில் இருந்து சேவைக்காலம் குறைந்தவர்களையும் சுகாதாரத் தொண்டராக கடமையாற்றாதவர்களையும் தேர்ந்தெடுத்து, வவுனியா பிரதேச செயலகத்தில், அவர்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று (23) நடைபெறுகின்றது.

'குறித்த நேர்முகத்தேர்வை நிறுத்தி, நியாயமான முறையில், தொண்டராக சேவையாற்றிய அனைத்து சுகாதார தொண்டர்களுக்கும் சேவைகால அடிப்படையில் தகமைபாராது நியமனங்கள் வழங்குவதற்கு ஆவனை செய்து தருமாறு வேண்டி நிற்கின்றோம்' என்றனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், வவுனியா பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றைக் கையளித்ததுடன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்குவதற்கான மகஜரொன்றையும் பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.

இதன்போது, மகஜரைப் பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளர், வடமாகாண பிரதம செயலாளரால் வழங்கப்பட்ட பட்டியலுக்கமையவே, குறித்த 28 பேருக்கும் இன்று (23) நேர்முகத்தேர்வுகள் இடம்பெறுகின்றதென்றார்.

ஏனையவர்களின் பட்டியல், எதிர்காலத்தில் கிடைக்கும் பட்சத்தில், நேர்முகத்தேர்வுகளை நடத்துவோம் என்று, ஆர்ப்பாட்டகாரர்களிடம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .