Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, வன்னேரிக்குளம் மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவரை நியமிக்குமாறு கிராம மக்கள் இணைந்து, கிளிநொச்சி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளருக்கு மனு மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த மருத்துவமனையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தர மருத்துவராக பணிபுரிந்தவர், கடந்த 10 க்கு முன்னர் ஓய்வு பெற்று சென்றதையடுத்து, நிரந்தர மருத்துவர் நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் வாழ்கின்ற 1,000 வரையான குடும்பங்கள் 10 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள அக்கராயன் பிரதேச மருத்துவமனைக்கே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தற்போது அக்கராயன் பிரதேச மருத்துவமனையில் 4 வரையான மருத்துவர்கள் பணியாற்றுவதன் காரணமாக வாரத்தில் 2 நாள்கள் மட்டும் வன்னேரிக்குளம் மருத்துவமனைக்குப் பணிக்கு வருகின்றனர். இந்நிலையில், அக்கராயனிலுள்ள மருத்துவர் ஒருவரை வன்னேரிக்குளத்திற்கு நிரந்தர மருத்துவராக நியமிப்பதன் மூலம் எமது கிராமத்தின் மருத்துவ நெருக்கடி நீங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் நேரிலும் மனுக்கள் மூலமும் நிரந்தர மருத்துவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டபோது வன்னேரிக்குளத்திற்கு மின்சாரம் வந்தால் மருத்துவர் நியமிக்கப்படுவார் என கூறப்பட்டது. தற்போது மின்சாரம் வழங்கப்பட்டு வந்து 4 ஆண்டுகள் கடந்து விட்டன. எனினும், மருத்துவமனையில் மின்சாரம் வசதிகளுடன் கூடிய மருத்துவ விடுதி உள்ளது. நிரந்தர மருத்துவர் நியமிக்கப்படும்போது மருத்துவருக்குரிய உணவு வசதிகளையும் கிராம பொது அமைப்புகள் செய்வதற்குத் தயாராக உள்ளன. இந்நிலையில் நிரந்தர மருத்துவர் ஒருவரை வன்னேரிக்குளத்திற்கு நியமிக்குமாறு கிராம மக்கள் வேண்டுகின்றோம் என கிளிநொச்சி பிரதி சுகாதாரப் பணிப்பாளருக்கான வேண்டுகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 minute ago
48 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
48 minute ago
58 minute ago
2 hours ago