2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

’நீண்ட வரட்சிக்குப் பின்னர் மழை’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்ட வரட்சிக்குப் பின்னர் கிளிநொச்சியில் இன்று (09) சுமார் 40 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதுடன், கிளிநொச்சிக் குளம் மற்றும் இரணைமடுக் குளத்துக்கு நீர் வர ஆரம்பித்துள்ளது எனவும் கிளிநொச்சி நீர்ப்பாசனப் பொறியியலாளர் என். சுதாகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நிலவிய கடுமையான வரட்சி காரணமாக சிறுபோகச்செய்கை  ஆபத்தான கட்டத்தை அண்மித்திருந்தது. இருந்தபோதும், குளங்களின் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி  சீரான நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், கடந்த வாரம் சிறுபோக செய்கை அழிவடையும் நிலையை எதிர்நோக்கியிருந்தது.

இந்நிலையிலேயே, கிளிநொச்சியில் ஓரளவு மழை பதிவாகியுள்ளது. இதனால் கிளிநொச்சிக்குளம், இரணைமடுக் குளத்துக்கும் நீர் வர ஆரம்பித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில், என். சுதாகரன் கருத்துத் தெரிவிக்கையில், "இன்று (09) பிற்பகல் 1.00 மணிக்குப்பின்னர் 40 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. இதனால் இரணைமடுக்குளத்தினுடைய நீர் மட்டம் ஆறு அங்குலம் வரை உயர்வடைந்துள்ளது.

அத்துடன் இரணைமடுக் குளத்தின் நீரைச் சேமித்து, சிறுபோகச் செய்கைக்கு நீரை விநியோகிக்கின்ற கிளநொச்சிக் குளத்தின் நீர்மட்டம் 7 அடியாக உயர்வடைந்துள்ளது. இதனால் வரட்சியில் எதிர்கொண்ட சவாலை முழுமையாகச் சமாளிக்க முடிந்துள்ளது. நேற்று (08) 3.5 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .