2025 மே 19, திங்கட்கிழமை

‘நீர்ப்பாசனத்திட்டங்கள் செயலிழப்புக்கு மக்களே காரணம்’

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பயிர்ச்செய்கைகளில் மக்கள் ஆர்வம் காட்டாததாலேயே, முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பகுதிகளில் உள்ள ஏற்று நீர்ப்பாசனத்திட்டங்கள் செயலிழந்துள்ளதாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

வவுனிக்குளத்தின் கீழ் குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது, துணுக்காய், மாந்தை கிழக்குப்பிரதேச செயலாளர் பிரிவுகளில், குடியிருப்புக் காணிகளில் உப உணவுச்செய்கைகளை ஊக்குவிக்கும் வகையில், ஏற்றுநீர்ப்பாசனத்திட்டங்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் யுத்தம் காரணமாக இதன் கட்டுமானங்கள் செயலிழந்து பயிர்ச்செய்கை நிலங்கள் பலவும் கைவிடப்பட்டன.

2009ஆம் ஆண்டு, மக்கள் மீள்குடியேறியதையடுத்து, பல மில்லியன் ரூபாய் செலவில் ஏற்று நீர்ப்பாசனத்திட்டங்கள் புனரமக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.

இருப்பினும் அவை தற்போது செயலிழந்து காணப்படுகின்றனவெனவும், அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X