2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நுண் கடன் திட்டத்துக்கு எதிராக மஜகர் கையளிப்பு

நடராசா கிருஸ்ணகுமார்   / 2018 ஜூன் 04 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுண் கடன் திட்டத்துக்கு எதிராக சமூக மட்ட அமப்புகளின் பிரதிநிதிகள் சிலர் இன்று (04) இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்திற்குச் சென்ற சமூக அமைப்புக்களைச் சேர்ந்த  பிரதிநிதிகள்  மத்திய வங்கியின் பிராந்திய முகாமையாளாரான  பாலகிருஸ்ணன் சிவதீபனிடம் கோரிக்கை மகஜரை கையளித்தனர்.

நுண் கடன் திட்டத்தினால் சமூகத்தில் குறிப்பாக பெண்கள் மத்தியில் ஏற்படுகின்ற பாதிப்புகள், தொடர்பிலும் அதனை கட்டுப்படுத்த மத்திய வங்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியும் தங்களின்  கோரிக்கை  மகஜரை கையளித்தாகவும்,  இன்னும் சில நாட்களில் நுண் கடன் திட்டத்திற்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும்  மகஜரை கையளித்த பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட  இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய காரியாலய முகாமையாளர் பா.சிவதீபன், தாங்கள் குறித்த மகஜரை  இலங்கை மத்திய வங்கியின் தலைமை காரியாலயத்துக்கு அனுப்பி வைப்பதாகவும், இது குறித்த மேலதிக தகவல்களையும் மத்திய வங்கியின் உயர் பீடத்திற்கு கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X