Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
வவுனியா, வடக்கு நெடுங்கேணி பிரதேச சபையின் ஆட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு வசமானது. இன்று காலை 10 மணிக்கு, உள்ளூராட்சி ஆணையாளர், பற்றிக் நிரஞ்சன் தலைமையில் ஆரம்பமான சபை அமர்விலே, அனைத்து கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது, தவிசாளர் தெரிவுக்காக 2 உறுப்பினர்கள் போட்டி இட்ட நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ச.தணிகாசலம் 11 வாக்குகளை பெற்றார். அவருக்கு, அவரது கட்சியை சேர்ந்த, 8 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஒருவரும், ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழர் விடுதலை கூடடணியின் ஜெ.யெயரூபன் 11 வாக்குகளை பெற்றார். அவருக்கு, அவரது கட்சியை சேர்ந்த 3 உறுப்பினர்களும் பொதுஜன பெரமுனவின் 5 உறுப்பினர்களும் சுதந்திர கட்சியின் 2 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்
இந்நிலையில், திருவுள சீட்டு மூலம், தமிழ் கூட்டமைப்பின் ச.தணிகாசலம், தவிசாளராக தெரிவு செய்யப்படடார்.
மேலும், உப தவிசாளருக்கான தெரிவில், மூவர் போட்டியிட்டிருந்த நிலையில், தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் து.தமிழ்ச்செல்வன், பொதுஜன பெரமுண சார்பில் க.விக்கிரமபால, தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நா.யோகராஜா ஆகியோர் போட்டியிட இருந்த நிலையில், த.வி.கூட்டணியின் து.தமிழ்ச்செல்வன் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நா.யோகராஜாவுக்கு த.தே.கூட்டணியின் 8 உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்த நிலையில், அவருக்கு மொத்தமாக 14 வாக்குகள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நா.யோகராஜா உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
முன்னர் தவிசாளர் தெரிவிலே, நடுநிலைமை வகித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி உப தவிசாளர் தெரிவில், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தது. அதுபோல, உப தவிசாளர் தெரிவில், தமிழர் விடுதலை கூட்டணி நடுநிலைமை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினரும் நடுநிலைமை வகித்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், மஸ்தான் மாகாணசபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், சத்தியலிங்கம், லிங்கநாதன், தர்மபால செனவிரத்ன, ஜயதிலக ஆகியோர் வவுனியா வடக்கு பிரதேசசபை தெரிவுக்கு பிரசன்னமாகியுள்ளனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago