2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

நெல் விற்பனையால் மாணவர்களின் போசாக்கு பாதிப்பு

நடராசா கிருஸ்ணகுமார்   / 2018 ஜனவரி 18 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற நெல்லை தென்னிலங்கைக்கு விற்பனை செய்து விட்டு, வெதுப்பக உற்பத்திகளை பிள்ளைகளுக்கு உணவாகக் கொடுப்பதன் காரணமாக கிளிநொச்சி மாவட்ட மாணவர்களின் போசாக்கு நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாக' கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

'கிளிநொச்சி மாவட்டத்தில் உற்பத்தி செய்கின்ற நெல் தென்னிலங்கைக்கு அனுப்பப்படுகின்றது. ஆனால் மாவட்டத்தின் மாணவர்கள் வெதுப்பக உற்பத்திகளை உணவாகப் பெற்றுக் கொடுப்பதன் காரணமாக மாணவர்ககளின் போசாக்கு நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. எமது மாவட்டத்தின் நெல்லினை பிள்ளைகளுக்கு உணவாகப் பயன்படுத்த வேண்டும். பெற்றோர்கள் வெதுப்பக உற்பத்திகளை நம்பி இருப்பதன் காரணமாக மாவட்டத்தில் வெதுப்பகங்கள் அதிகரித்துள்ளன. தங்களுடைய பிள்ளைகளின் போசாக்கு உயர்வுக்கு வெதுப்பக உற்பத்திகளை நம்பி இருக்காமல் மாவட்டத்தில் உற்பத்தி செய்கின்ற உணவுப் பொருட்களை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வழங்குவதன் மூலம் மாணவர்களின் போசாக்கு மட்டத்தை உயர்த்த முடியும். மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் போசாக்கு நிலவரம் தொடர்பாக வலயக் கல்விப் பணிமனையினால் விபரங்கள் திரட்டப்படுகின்றன' என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X