Niroshini / 2021 ஜூலை 04 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்காக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இன்றைய தினம் (04) வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுக்குச் சென்றுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலில் நேர்த்திக் கடன் வைத்திருந்த நிலையில், அதனை நிறைவேற்றும் முகமாக, நேற்று (04) கோவிலுக்கு வருகை தந்தார்.
இந்நிலையில் இது தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர்களுக்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டது.
தனிப்பட்ட நிகழ்வாக அமைச்சர் வழிபாடுகளில் கலந்துகொள்ள வந்துள்ள நிலையில், அதனை ஒளிப்பதிவு செய்யவோ, புகைப்படங்களை எடுக்கவோ ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என, பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago