Niroshini / 2021 ஒக்டோபர் 07 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனை பகுதியில்,
162 கிலோகிராம் மஞ்சள், நேற்று மீட்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நொச்சிமுனை கடற்கரையில் இருந்து நான்கு சாக்கு மூடைகளில் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் இருந்த போதே, இந்த மஞ்சள் தொகை மீட்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில், நொச்சிமுனையை சேர்ந்த 39 வயதான ஒருவரையும் அன்புரத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் முழங்காவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15 minute ago
38 minute ago
43 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
38 minute ago
43 minute ago
53 minute ago