2025 மே 07, புதன்கிழமை

'நோயாளரின் வீடுகளுக்கே மருந்து'

Niroshini   / 2020 நவம்பர் 08 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

அஞ்சல் திணைக்களத்தின் ஊடாக வவுனியா மாலட்ட பொது வைத்தியசாலையில் பதிவுசெய்துள்ள கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை அவர்களது வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக, வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.நந்தகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தற்போதைய சூழ்நிலையில் நேரடியாக வந்து மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாத பொது கிளினிக் நோயாளர்கள், 0740104936 எனும் அலைபேசி இலக்கத்துடன் காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை தொடர்பு கொள்ள முடிமென்றார்.

அத்துடன், பொதுவைத்திய நிபுணர்களுக்கான கிளினிக் நோயாளர்கள் (ஏP ழுPனு) 0761001936 என்ற அலைபேசி இலக்கத்துடனும் காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை தொடர்புகொள்ள முடியுமெனவும், அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, இவ்விலக்கங்களுக்கு நோயாளரின் பெயர், தற்போதைய வதிவிட முகவரி, கிளினிக் பதிவு இலக்கம், பாவனையிலுள்ள அலைபேசி இலக்கம், வீட்டுக்கு அருகாமையிலுள்ள தபால் கந்தோரின் விலாசம் ஆகிய தகவல்களை, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் வழங்குமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.

அலைபேசியூடாக அறியத்தர முடியாதவர்கள், தங்கள் கிராம உத்தியோகத்தர் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர் ஊடாக மேற்படி விவரங்களை அறியத்தருமாறும், வைத்தியரின் ஆலோசனையை நேரடியாக பெறவேண்டும் என கருதும் நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வழமைபோன்று சமூகமளித்து வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், நந்தகுமார் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X