Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2017 ஜூலை 17 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி பளைப் பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறச் சென்ற நோயாளர்கள், வைத்தியர் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
சிகிச்சை பெறச்சென்ற நோயாளர்கள், நேற்று முன்தினம் காலை 9.30 மணி வரையும் காக்க வைக்கப்பட்ட பின்னர், வைத்தியர் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
ஒரு வைத்தியர் தான் உள்ளார். இரவு கடமையில் இருந்து விட்டு அவர் சென்றுள்ளார். வேறு வைத்தியசாலைக்குச் சென்று நீங்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என்று வைத்தியசாலை உத்தியோகத்தர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டிக்கு 500 ரூபாய் கொடுத்து சிகிச்கைக்காக சென்றபோதே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர், சாவகச்சேரி வைத்தியசாலைக்குச் சென்றே சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களத்துடன் தொடர்பு கொண்டபோது, தற்போது ஒரு வைத்தியரே கடமையில் உள்ளதாகவும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .