2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு வலைவீச்சு

George   / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு செல்லாது தவறான வழிகளில் ஈடுபடும் சிறுவர்களை மத்திய அரசு, மாகாண சபை, பொலிஸார் ஆகியோர் இணைந்து பாடசாலைகளில் இணைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருக்கின்றது” என வடமாகாண சிறுவர் பராமரிப்பு திணைக்கத்தின் ஆணையாளர் டி.விஸ்வரூபன் தெரிவித்தார்.

மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளிலும் நகரை அண்மித்த பகுதிகளிலும் பாடசாலைகளுக்குச் செல்லாத மற்றும் பாடசாலை வரவு ஒழுங்கற்று காணப்படும் சிறுவர்களின் தொகை அதிகளவில் காணப்படுகின்றது.

இவ்வாறான சிறுவர்கள் தவறான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் பல்வேறு தரப்புக்களாலும் குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில், கிளிநொச்சி நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பிடிக்கப்பட்டு சிறுவர் இல்லங்களிலும் நன்னடத்தை பாடசாலைகளிலும் இணைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, தொடர்ந்தும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக  மாவட்ட சிறுவர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் விஸ்வரூபன் கருத்துக்கூறுகையில், “இதற்கு ஒத்துழைக்காதவர்களை நீதிமன்றங்களில் நிறுத்தி கல்வி கற்பிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தவறான நடத்தைகளுக்கு உட்படும் சிறுவர்கள், சீர்திருத்தப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றனர் பின்னர் அவர்களின் எதிர்காலத்துக்கு தேவையான கல்வி மற்றும் தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு தொழில் வாய்ப்புக்களுக்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. இதன் மூலம் சிறுவர்கள் பாடசாலைகளில் இருந்து தவறான வழிகளில் செல்வது தடுக்கப்படுகின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .