2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பாடசாலை செல்லாத மாணவர்களின் விவரங்கள் திரட்டப்படுகின்றன

George   / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி அக்கராயனில் பாடசாலை செல்லாத மாணவர்கள் தொடர்பாக விவரங்கள் திரட்டப்படுகின்றன. இது தொடர்பான கூட்டமொன்று அக்கராயன் கெங்காதரன் பொது நோக்கு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (07) மாலை கிராம அலுவலர் பசுபதி சபாரட்ணம் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலை செல்லாத மாணவர்களை இனங்கண்டு அவர்களை பாடசாலைகளில் இணைக்கின்ற செயற்பாட்டினை முதன்மையாகக் கொண்டு நடாத்தப்பட்ட இக்கூட்டத்தில் தற்போது இப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு உதவுதல், சிறுவர்களின் உளமேம்பாடு கருதி வீட்டுத் தோட்டச் செய்கைகளில் சிறுவர்களை ஈடுபடுத்துதல் எனப் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

கிளிநொச்சி லீட்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறுவர் விழாவினை நடாத்துவது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கரைச்சி பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர் எஸ்.றெஜினோல்ட், லீட்ஸ் நிறுவன அதிகாரியும் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .