2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பாடசாலை வளாகத்தில் தற்கொலை அங்கி

Niroshini   / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா விபுலானந்தா பாடசாலையின் வளாகத்திலிருந்து தற்கொலை அங்கியும் அலைபேசி சார்ஜரும் நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பாடசாலைக்கு புதியக் கட்டடம் அமைப்பதற்கான பணிகள் ஒப்பந்தக்காரர்களால், நேற்று மேற்கொள்ளப்பட்டன. நிலத்தை ஆழமாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோதே அந்தப் வெடிப்பொருட்களை அவர்கள் கண்டுள்ளனர்.

இதுதொடர்பில், வவுனியா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சோமரத்தின விஜயமுனிஇ தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

12 மணியளவிலே இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டன. சம்பவத்தை அடுத்து விரைந்துசெயற்பட்ட பொலிஸார், வகுப்பறைகளிலிருந்து மாணவர்களை வெளியேற்றவேண்டாம் என்று பணித்தனர்.

அத்துடன், அகழ்வுப்பணிகளை உடனடியாக நிறுத்துமாறும், அப்பணிகளை மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறியதன் பின்னர், அதாவது மேலதிக வகுப்புகள் நிறைவடைந்ததும் மாலை 3.30க்கு பின்னர்  அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .