Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஜூன் 01 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தையல்பயிற்சி நெறி தொடர்பான செயலமர்வு செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்றது.
மகளிர் விவகார அமைச்சின் அனுசரணையும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில், கிளிநொச்சியில் அமைந்துள்ள மகளிர் விவகார அமைச்சின் இணைப்பு அலுவலகத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் பயிற்சி தொடர்பான ஒருநாள் செயலமர்வு நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் மாவட்ட அலுவலர் செல்வி கே.சகிலா தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச்செயலர் எஸ்.சத்தியசீலன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .