2025 ஜூலை 05, சனிக்கிழமை

புதுக்குடியிருப்பில் குடிநீருக்கு தட்டுப்பாடு

Sudharshini   / 2016 ஜூலை 06 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம், சிவநகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் பெறுவதில் இப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்;க்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

முல்லைத்;தீவு, புதுக்குயிருப்பு பிரதேச சபையின் கீழ்லுள்ள ஆனந்தபுரம், சிவபுரம் செம்மன்குன்று ஆகிய பகுதிகளில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இப்பகுதிகளில் கடல் தடுப்பணைகள் இன்மையால் உவர் நீர் மக்கள் குடியிருப்புக்களுக்குள் வருகின்றது. இதனால், பெரும்பாலான குடிநீர் கிணறுகளில் உவர் நீர் கலந்துள்ளன.

இவ்வாறு குடிநீர் கிணறுகள் உவராகியமையால் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதுடன் இப்;பகுதி மக்கள் தமக்கான குடிநீரைப் பெற்;றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக ஆனந்தபுரம், சிவபுரம், இரணைப்பாலையின் ஒரு பகுதி, செம்;மன்குன்று ஆகிய பகுதிகளில் இவ்வாறு குடிநீர்த்தட்;டுப்பாடு நிலவி வருகின்;றது,

இப்பகுதி மக்கள் தமக்கான குடிநீரை பெறுவதற்கு மிக நீண்டதூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .