Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Niroshini / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்காக 4,599 வீடுகள் தேவைப்படுவதாக, திங்கட்கிழமை (19) பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டடிக்காட்டப்பட்டது.
மீள்குடியேற்றத்தின் பின்னர் 7,198 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 473 வீடுகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 551 வீடுகள் இன்னமும் புனரமைக்கப்பட வேண்டியுள்ளதாகவும் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு, கரைதுறைபற்று, ஒட்டுசுட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு முன்னராக ஒன்றுகூடிய மக்கள், தங்களது வீடுகளை எதிர்வரும் மாரி மழைக்கு முன்னர் அமைத்துத் தரும்படியும் பொது இடங்களில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றும்படியும் இணைத்தலைமைகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(20) நடைபெறும் அமர்வுகளில் இது தொடர்பாக விடயங்களைத் தெரியப்படுத்தவுள்ளதாக இணைத் தலைவர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago