2025 ஜூலை 05, சனிக்கிழமை

போத்தலால் தாக்கிய நபருக்கு விளக்கமறியல்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, நேரியகுளம் பரணதொடுவாய் பகுதியில் குடும்பஸ்தரை போத்தலால் தாக்கிய நபரை, விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்ற நீதவான் நேற்று திங்கட்கிழமை (21) உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, நேரியகுளம், பரணதொடுவாய் பகுதியில் வசிக்கும் இரு குடும்பத் தலைவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மது போதையில் இருந்த நபர் மற்றவரை போத்தலால் தாக்கியுள்ளார்.

இது தொடர்பில் போத்தலால் தாக்கிய நபர் வவுனியா, செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .