2025 ஜூலை 07, திங்கட்கிழமை

புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் விரைவில் பூர்த்தியாகும்

George   / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக புதிய கட்டடப் பணிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் நிறைவுசெய்து டிசெம்பரில் திறப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக பூநகரிப் பிரதேச செயலாளர் சந்திரன் கிருஸ்ணேந்திரன் தெரிவித்தார்.

பூநகரிப் பிரதேச செயலகத்தின் கட்டடப் பணிகள் 2010இல் ஆரம்பிக்கப்பட்டன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் என்ரிப் திட்டத்தின் கீழ் இவ்வேலைகள் தொடங்கப்பட்ட போதிலும் தொடக்கப்பணியுடன் மூன்றாண்டுகளுக்கு மேலாக கட்டடப்பணிகள் முன்னெடுக்கப்படாமல் தடைப்பட்டிருந்த நிலையில் நிதி, திறைசேரிக்குத் திரும்பியிருந்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிடைக்கப்பெற்ற பதினைந்து மில்லியன் ரூபாய் நிதியில் தற்போது பிரதேச செயலகக் கட்டடப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. பூநகரி வாடியடியில் இக்கட்டடப் பணிகள் நடைபெறுகின்றன.

வாடியடிச் சந்தியிலிருந்து யாழ்ப்பாணப் பக்கமாக ஒருகிலோமீற்றர் தூரத்தில் பூநகரிப் பிரதேச செயலகம் தற்காலிக கட்டடத்தில் இடநெருக்கடிகளுடன் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .