2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

புதிய நிர்வாகிகள் தெரிவு

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா, பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் புதிய தலைவராக வீரவாகு ஜெகசோதிநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

வவனியா முத்தையா மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற புதிய நிர்வகத்தைத் தெரிவு செய்யும் பொதுச்சபை கூட்டத்திலேயே, அவர் தெரிவு செய்யப்பட்டார். 

பொதுச்சபை உறுப்பினர்களுக்கிடையில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பின் பிரகாரம், முன்னாள் கிராம சேவகரான வீரவாகு ஜெகசோதிநாதன், 61 வாக்குகளைப் பெற்று தலைவராகவும் நாகமுத்து நாகேந்திரன், 51 வாக்குகளைப் பெற்று உப-தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், த. சிவராஜா, பொ.மங்களநாதன் மற்றும் மாரிமுத்து சிவகுமார் ஆகியோர் புதிய நிர்வாகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன், 35 வயதுக்குட்பட்டோருக்கான நிர்வாக அங்கத்துவத்தில் வேதநாயகம் தயாநந்தன் மற்றும் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நிர்வாகக் காலத்தில், வவுனியா பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத்தின் பல கிளைகள் மூடப்பட்டு வந்த நிலையில், நட்டத்தில் இயங்கிய நிலையிலேயே, புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .