Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Kogilavani / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் மீன்பிடி கிராமங்களில்; பல்வேறு தேவைகள் காணப்படுவதாகவும் அவற்றை தீர்ப்பதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பூநகரி பிரதேச செயலகப் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்;பட்டுள்ளது.
பூநகரி பிரதேசத்தில் மீனவர்கள் மற்றும் மீனவக்குடும்பங்களின் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்;பட வேண்டியுள்ளது. இதில் முன்னுரிமை அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்;பட்டு வருகின்றபோதும் மேலும் தேவைகள் காணப்படுகின்றன.
இதில் முக்கிய தேவைகள் இனங்காணப்பட்டு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பூநகரி பிரதேச செயலகப்புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆறு இறங்கு துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு 25.5 மில்லியன் ரூபாயும் எட்டு மீனவர் ஒய்வு மண்டபங்களை அமைப்பதற்கு 20 மில்லியன் ரூபாயும் 17 கிலோ மீற்றர் நீளமான மீனவர் வீதிகளை புனரமைப்பதற்கு 32 மில்லியன் ரூபாயும் திசைகாட்டிகளுக்கு 5.2 மில்;லியன் ரூபாயும் தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
உயிர்காப்பு அங்கிகளுக்கான 1.7 மில்;லியன் ரூபாயும் பொதுநோக்கு மண்டபம் அமைப்பதற்கு 3 மில்லியன் ரூபாயும் விளையாட்டு மைதானம் கடற்கரைத்தோட்;டம் அமைப்பதற்கு 5 மில்லியன் ரூபாயும் விழிப்புணர்வு கருத்தரங்குகளுக்கு 0.2 மில்லியன் ரூபாயும் முன்பள்ளி தளபாடங்களுக்கு ஒரு மில்லியன் ரூபாயும் சந்தை வசதிகளை ஏற்படுத்துவதற்கு 2.7 மில்லியன் ரூபாவும் தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago