2025 ஜூலை 16, புதன்கிழமை

பாம்பு தீண்டியதால் சிறுவன் உயிரிழப்பு

Kogilavani   / 2017 ஏப்ரல் 12 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
மல்லாவி, பாலிநகர் பகுதியில் பாம்பு தீண்டியதன் காரணமாக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நாகேஸ்வரன் விதுசன் (வயது 10) என்ற சிறுவன் செவ்வாய்க்கிழமை (11)  உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலிநகர் கிராமத்திலுள்ள  தனது வீட்டிலிருந்து  சிவபுரம்  கிராமத்திலுள்ள  உறவினர் வீட்டுக்கு திங்கட்கிழமை (10) மாலை  சைக்கிளில் இச்சிறுவன் சென்றுகொண்டிருந்தபோது,  வீதிக்கு குறுக்காக பாம்பு ஊர்ந்ததைக் கண்ட  சிறுவன்,  பதற்றம் அடைந்து கீழே விழுந்துள்ளான். இதன்போது, இச்சிறுவனின் தலையில் பாம்பு தீண்டியுள்ளது.

கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X