2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பாலைப்பாணி கிராமத்துக்கு மின்சாரம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசசெயலக பிரிவுக்குட்ப்பட்ட  பாலைப்பாணி கிராமத்திற்கான மின்னிணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாங்குளம் மின் அத்தியட்சகர்  செந்தில்செல்வன் தெரிவித்தார்.

இதுவரைகாலமும் மின்னிணைப்பே இல்லாதிருந்த  பிரதான வீதியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் காட்டுப்பிரதேசத்தை கடந்து உள்ள இக்கிராமத்திற்கான மின்னிணைப்பே வழங்கப்பட்டுள்ளது.

இந்தப்பகுதி மக்கள் பலகாலமாக தமது பகுதிக்கு மின்னிணைப்பை பெற்றுத்தருமாறு கோரிவந்த நிலையில், இச்செயற்ப்பாடு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது என்றும் அத்தியட்சகர்  செந்தில்செல்வன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .