Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Niroshini / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
தர்மபுரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தர்மபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரை திட்டிய குற்றச்சாட்டில், உழவனூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம், வியாழக்கிழமை(22) உத்தரவு பிறப்பித்தது.
கடந்த மாதம் பொலிஸார் தர்மபுரம் உழவனூர்ப் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டதில், குறித்த உற்பத்தி நிலையத்தில் இருந்த சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.
தப்பியோடிய சந்தேக நபரை, மறுநாள் கைது செய்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்காக அழைத்து வந்த வேளை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் முன்னால் வைத்து தர்மபுரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தர்மபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரை குறித்த சந்தேக நபரின் தாயார் திட்டியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக குறித்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்தே, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago