2025 ஜூலை 05, சனிக்கிழமை

பாலத்தை புனரமைக்க 1,000 மில்லியன் ரூபாய் தேவை

Niroshini   / 2016 ஜூன் 22 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் (ஏ – 35 வீதி) அமைந்துள்ள வட்டுவாகல் பாலத்தை புனரமைப்பதற்கு 1,000 மில்லியன் ரூபாய் நிதி தேவை என வீதி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வட்டுவாகல் பாலம் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதுடன் அதன் பாதுகாப்பு தூண்கள் முழுமையாக அழிவடைந்து காணப்படுகின்றன. அத்துடன், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்புக்களும் இடம்பெறுகின்றன.

இந்நிலையில், இப்பாலத்தை புனரமைத்து தருமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறு சேதமடைந்து காணப்படும் வட்டுவாகல் பாலத்தை புனரமைப்பதற்கு 1,000 மில்லியன் ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிதி கிடைக்கும் பட்சத்தில் விரைந்து புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும் என அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

1950ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைக்கப்பட்ட சுமார் 200 மீற்றர் நீளமான இந்தப் பாலம், யுத்த காலத்தில் சேதமைடைந்திருந்தது.பின்னர் சிறு சிறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்கள் பிரயாணம் செய்யக்கூடிய அளவுக்கு இந்த பாலம் மாற்றப்பட்டது.

இந்நிலையில், கடும்மழை காரணமாக வான் வெள்ளம் இந்தப் பாலத்தினூடாக பாய்ந்தமையால் பாலம் முற்றாகச் சேதமடைந்துள்ளது. இதனால் பாலத்தை உடனடியாகத் திருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .