Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Princiya Dixci / 2017 ஏப்ரல் 08 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம், நாளை ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெறவுள்ளது.
இந்நிலையில்; ஆலயத்துக்கு வருகைதரும் பொதுமக்களுக்கான வகனத் தரிப்பிடக்கட்டணங்கள் அதிகளவில் வசூலிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லையெனவும் உற்வச காலத்துக்கான வாகனத் தரிப்பிடங்கள் கட்டணங்கள் தொடர்பில் கரைச்சிப்பிரதேச சபையின் கேள்வி கோரல் மூலமே தீர்மானிக்கப்பட்டுள்ள எனவும் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
அதாவது, பொங்கல் உற்சவத்துக்கான வாகனத்தரிப்பிடங்கள் கரைச்சிப்பிரதேச சபையினால் கேள்வி கோரப்பட்டு, பிரதேச சபையினாலேயே முன்னெடுக்கப்படுகின்றது.
ஏனைய ஆலயங்கள் போன்று தரிப்பிட வசதிகள் இல்லாததால் வயல் நிலங்களில் தற்காலிகமாக தரிப்பிடங்களை அமைத்து அவற்றுக்கான பாதுகாப்பு வேலிகள் என்பவற்றை அமைத்து வருடாந்தம் வாகனங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
இம்முறை மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு, ஐம்பது ரூபாய் எனவும் துவிச்சக்கரவண்டிக்கு இருபது ரூபாய் எனவும் அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago