2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பாழடைந்த வீட்டிலிருந்து 154 போத்தல்கள் கசிப்பு சிக்கியது

George   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு 4ஆம் ஒழுங்கை பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றிலிருந்து 154 போத்தல் கசிப்பு, தருமபுரம் பொலிஸாரால் திங்கட்கிழமை (15) கைப்பற்றப்பட்டுள்ளது.

தருமபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் கசிப்பினை கைப்பற்றியுள்ளனர்.

154 போத்தல்கள் கசிப்பில் மேலும் ஒரு மடங்கு நீர் கலந்து விற்பனை செய்யப்படவிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .