Editorial / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - இரணைதீவு பகுதி மக்களின் மருத்துவத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் நோயாளர்களுக்கான படகுச்சேவை ஒன்றினை ஏற்படுத்துமாறு கோரியுள்ளனர்.
கிளிநொச்சி – பூநகரிப் பிரதேசத்துக்குட்படட இரணைதீவுப் பகுதியில் மக்கள் மீள்குடியேறியதையடுத்து, குறித்த பிரதேச மக்களின் மருத்துவத் தேவை நிவர்த்தி செயயப்படுவதில் காலதாமதங்கள் காணப்படுகின்றன எனத் தெரிவித்த இரணைதீவு மக்கள், இரணைதீவிலிருந்து நோயாளிகளைக் கொண்டு செல்வதற்கு ஏற்றவகையில் நோயாளர்களுக்கான படகுச்சேவையை மேற்கொள்ள சம்பந்தப்படட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூர்வீகமாக மக்கள் வாழ்ந்த குறித்த தீவில் வெளியேற்றப்பட்டு இருபத்தி எட்டு வருடங்களின் பின்னர், சொந்த இடத்தில் குடியமர அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இங்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாவிட்டாலும் மருத்துவ வசதி என்பது மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுவதால், இந்த மருத்துவ வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
15 Dec 2025