Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 ஜூன் 30 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
நாட்டின் பாதுகாப்புக்கு படையினர் முன்னிற்பதால் தான் மக்களும் நாட்டின் வளங்களும் பாதுகாக்கப்படுகின்றன என, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மொஹமட் சாட் கட்டாக் தெரிவித்தார்.
வடக்குக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள உயர்ஸ்தானிகர், கிளிநொச்சிக்கு, நேற்று (29) மாலை சென்று, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 30 குடும்பங்களுக்கான உலருணவுப் பொருள்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தரையாற்றிய அவர், இலங்கையும் பாகிஸ்தானும் நீண்ட காலமாக நட்பு நாடுகளாகவும் பொருளாதார உதவிகளை வழங்குகின்ற நாடுகளாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் ஏனைய உதவிகளை வழங்கும் நாடுகளாகவும் இருந்து வருகின்றன என்றார்.
தீவிரவாதம் பற்றி பேசுகின்ற போது, முதலாவதாகவும் கடைசியாகவும் பாதுகாப்பு பற்றி பேசுவதாகக் காணப்படுவதாகத் தெரிவித்த அவர். இதற்கு இலங்கை தான் முன்னுதாரணமாகுமெனவும் கூறினார்.
நாட்டின் பாதுகாப்புக்கு பாதுகாப்புப் படைகள் தான் முன்னிற்கின்றன எனத் தெரிவித்த அவர், படையினர் முன்னிற்பதால் தான் மக்களும் நாட்டின் வளங்களும் பாதுகாக்கப்படுகின்றன என்றும் கூறினார்.
'இலங்கை பாதுகாப்புப் படைகள் நாட்டை பாதுகாக்கும் சிறப்பை உடையவர்களாக காணப்படுகின்றனர். அத்துடன், தலைமைத்துவம் பற்றி பேசும்போது, இலங்கையும் பாகிஸ்தானும் மிகவும் நெருக்கமான தலைமைத்துவத்தை கொண்ட நாடாகவே நான் கருதுகின்றேன்' என்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
51 minute ago
52 minute ago
5 hours ago