Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Gavitha / 2021 ஜனவரி 04 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியாவில், முடக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்கள், வவுனியா நகரிலுள்ள தங்களது வர்த்தக நிலையங்களைத் திறந்து வைத்துள்ளமையால், கொரோனா வைரஸ் தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளது.
வவுனியா பட்டானிக்சூர் பகுதியில், கொரானா வைரஸ் தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அப்பகுதி முற்றாக முடக்கப்பட்டது.
முதலாம் ஒழுங்கையில் இருந்து, 5ஆம் ஒழுங்கை வரை, அனைத்து பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதிக்கு எவரும் வருகை தர முடியாத நிலையில் பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வவுனியா நகர்ப்பகுதியிலுள்ள பல வர்த்தக நிலையத்தில் கடமையாற்றுபவர்களும் வர்த்தக நிலைய உரிமையாளர்களும், இப்பகுதியிலேயே வசித்து வரும் நிலையில், இப்பகுதியில் இருந்து வருவோரின் வர்த்தக நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இவர்களது வர்த்தக நிலையங்களை மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், தற்போது இது எவ்வாறு திக்கப்பட்டது என்பது தொடர்பான கேள்வி எழுந்துள்ளது.
இந்த வர்த்தக நிலையங்களுக்கும் பலர் சென்று வருவதால், வவுனியாவின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வி, பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
35 minute ago
49 minute ago