Niroshini / 2021 டிசெம்பர் 27 , பி.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - திருமுறிகண்டி பகுதியில், இன்று (27), பெண் ஒருவரை ஏமாற்றி பத்து இலட்சத்து 85,000 ரூபாய் பணத்தை மோசடி செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்ணொருவரிடம் அவரது வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் பெறுமதியான பொருள்களை அனுப்பியுள்ளதாக, தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு குறித்த பணத் தொகையை வங்கியில் வைப்பிலிடுமாறு தெரிவிக்கப்பட்டது.
அதை அடுத்து, 10 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை மேற்படி சந்தேகநபரின் பெயரில் வங்கியில் வைப்பிலிட்டதாகவும் தெரிவித்து, கடந்த செப்டம்பர் மாதம் இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸாரின் விசேட நடவடிக்கை மூலம் கொழும்பு தெமட்டகொடை பகுதியில் வைத்து இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரை, கிளிநொச்சி மாவட்ட நிதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
14 minute ago
21 minute ago
25 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
25 minute ago
58 minute ago