Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 11 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
- மு. தமிழ்ச்செல்வன்
கடந்த சில நாட்களாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்க்கப்படாது திருப்பி அனுப்பப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கொரோனா நோயாளிகள், மாதாந்த கிளினிக் நோயாளிகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவு நோயாளிகள் ஆகியோரும் முழுமையான சேவைகளை பெற்றுக்கொள்ளாது வீடுகளுக்கு திரும்பும் அவல நிலை ஏற்பட்டுளளது
தாதியர்கள் உட்பட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் கடந்த திங்கள் கிழமை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக வைத்தியசாலைக்களுக்கு சிகிச்சை பெற சென்ற நோயாளிகள் மருந்துகளை பெறமுடியாது வீடுகளுக்கு திரும்புகின்றனர்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு கூட மருந்துகள்
வழங்கப்படவில்லை எனவும் இதனால் வசதியுள்ள சிலர் தனியார் மருந்தகங்களில் மருந்துக்களை வாங்கி செல்வதாகவும் பொது மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்ரே, இரத்தம் மற்றும் சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனைகள்
மேற்கொள்ளப்படவில்லை என்றும் சத்திர சிகிச்சைகள் கூட
பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 minute ago
17 minute ago
24 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
24 minute ago
43 minute ago