2025 ஜூலை 21, திங்கட்கிழமை

பண்டார வன்னியனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

. அகரன்

வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றியதை நினைவு கூர்ந்து 214 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியாவில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள பண்டாரவன்னியனின் நினைவுத்தூபியில் நினைவுத்தூபியினை நிறுவுவதற்கு அரும்பெரும் பணிகளை மேற்கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் இன்று காலை 8.30 மணியளவில் மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் வவுனியா நகரசபையின் கலாசார மண்டபத்தில் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X