2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பண்பாட்டு பெருவிழாவில் வெறிச்சோடிக் காணப்பட்ட கதிரைகள்

Editorial   / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வடமாகாணப் பண்பாட்டு பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில், பலரும் கலந்துகொள்ளாமையால் மண்டபத்தில் கதிரைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

வடமாகாண பண்பாட்டு பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள், வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில், நேற்று (12) இரு அமர்வுகளாக நடைபெற்றன.

இரண்டாம் நாள் நிகழ்வின் மாலை அமர்வில், பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கலந்​துகொண்டார்.

இதன்போது, நிகழ்வு மண்டபமானது வெற்றுக் கதிரைகளுடன் காட்சியளித்தது. குறைந்தளவிலான கலைஞர்களே நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவின் கலைஞர்களுக்கு இடையிலான பாரபட்சம், வவுனியா கலாசார உத்திதியோகத்தர்கள், வவுனியா கலைஞர்களுக்கு இடையிலான பாரபட்சமான செயற்பாடுகள், சீரான ஒழுங்கமைப்பின்மை போன்ற காரணங்களாலேயே, மண்டபம் சோவையிழந்து காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பெருமளவு நிதியில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்தப் பண்பாட்டு விழாவானது, திட்டமிடலின்றி நடைபெற்றமை, கலைஞர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .