Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மார்ச் 27 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
பன்னங்கண்டி, சரஸ்வதி கமம், ஜொனி குடியிருப்பு மக்களின் போராட்டம், 6ஆவது நாளாக இன்று தொடர்கிறது.
1996ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலை புலிகளால் காணியற்ற மக்களுக்கு, பல்வேறு பகுதிகளிலும் காணிகள் வழங்கப்பட்டன. பராமரிப்பற்ற நிலையில் இருந்த இந்தக் காணிகள் 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில், தற்போது இங்கு வசிக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டது.
பசுபதி கமம் என அழைக்கப்படும் பகுதியில் சுமார் 65 குடும்பங்களை சேர்ந்த 200 மேற்பட்ட மக்களும், சரஸ்வதி கமம் என அழைக்கப்படும் பகுதியில் 106 குடும்பங்களை சேர்ந்த 400 மேற்பட்ட மக்களும், ஜொனி குடியிருப்பு என அழைக்கப்படும் பகுதியில் 16 குடும்பங்களை சேர்ந்த சுமார் 60 மேற்பட்டவர்களும் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் சிவா பசுபதி என்பவருக்குச் சொந்தமான 33 ஏக்கர் காணியில் 18 ஏக்கர் அளவிலான பகுதியில் 65 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அதே போன்று சரஸ்வதி என்பவருக்கு உரித்தான 47 ஏக்கர் பரப்பைக் கொண்ட சரஸ்வதி கமத்தில் 47 சுமார் 30 ஏக்கர் அளவிலான பகுதியிலும் மக்கள் வாழ்ந்து வருக்கின்றதுடன், ஜொனி குடியிருப்பு என அழைக்கப்படும் கிராமத்தில் 16 குடும்பங்கள் வாழ்கின்றனர்.
கடந்த 4ஆம் திகதி முதல், சிவா பசுபதி கம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, காணி உரிமையாளரின் சம்மதத்துடன் வீட்டுத்திட்டம் வழங்கப்படும் என மாவட்டச் செயலாளர் தெரிவித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், மற்றைய இரு கிராமங்களையும் சேர்ந்த அந்த மக்கள், புதன்கிழமை (22) முதல், கவன ஈர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
1 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago