Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ் கர்ணன்
இயற்கை நமக்குதந்த பனையிலிருந்து உச்ச பயனைப்பெறும் நோக்கிலும் பனை தரத்தை உலக சந்தையின் தரத்துக்கு கூட்டி இதனை நம்பி வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவுமே புதிய தொழிநுட்பத்துடன் கூடிய வகையில் புதிய வடிவமைப்புடன், இவ்வடிசாலையானது புனரமைக்கப்படுகின்றது என, அமைச்சர் டீ.எம். சுவாமிநதன் தெரிவித்தார்
வடமராட்சி திக்கம் வடிசாலை புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை இன்று நாட்டி வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், திக்கம் வடிசாலையானது பனையை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு காரணங்களினால் 2013ஆம் ஆண்டு தன் செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டதெனத் தெரிவித்தார்.
இன்று அரசாங்கத்தால் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதியானது ஒதுக்கப்பட்டு திக்கம் வடிசாலையானது மீள் நிர்மானம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு அன்று அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நாங்கள் ஒன்று கூடியுள்ளோம்.
இத்துறை சார்ந்த அமைச்சின் அமைச்சர் என்ற வகையிலும் இச்சமூகத்தின் முன்னேற்றத்தின் அக்கறை கொண்டவர் என்ற வகையிலும் எனது விருப்பமும் எனது விண்ணப்பமும் திக்கம் வடிசாலையில் உருவாக்கப்படும். பனம் கள்ளை உலக சந்தைக்கு எடுத்துச் செல்லப்பட எல்லோரும் முன்னின்று செயற்பட வேண்டும். இதுவே எமது நாட்டுக்கு வருவாயை ஈட்டித்தரும் வழியாக அமைவதோடு, எமது வளத்துக்கான சிறந்த அங்கிகாரம் கிடைக்கும் வழியாகவும் அமைகிறது.
பனை அபிவிருத்திச் சபையும் எமது அமைச்சும் சோந்து வடமாகாணத்தில் தரமாண புதிய தொழிநுட்பத்துடன் கூடிய திக்கம் வடிசாலையை உருவாக்க மிகவும் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகின்றோம் அந்த வகையில் அண்ணளவாக 250 மில்லியன் ரூபாய் செலவில் இத்திக்கம் வடிசாலை மீள் நிர்மாணம் செய்யப்படுகின்றது. திக்கம் வசொலையை நிர்மாணிப்பதிலும் தொழிநுட்ப வசதிகளை நிர்மாணம் செய்து அதன் பின் ஒரு வருடகால செய்பாட்டை உறுதிப்படுத்தலும் எம்மால் தெரிவு செய்யப்பட்ட ஆலோசனைக் குழுவே பொறுப்புடையவர்களாக உள்ளனர்.
போருக்கு பின்னரான காலப்பகுதியல் மக்கள் இயல்பு வாழ்வை பெற்று பொருளாதார ரீதியிலும் வலுப்பெற்று வாழ வேண்டும் என்பதே எமது நல்லாட்சி அரசாற்கத்தின் விருப்பம் அந்த வகையிலும் எமது இந்த முன்னெடுப்பு அமையும்.
இங்கு பொருத்தப்படும் பொறித்தொகுதியானது 35,000 தொடக்கம் 45,000 வரையான கள்ளினனை வடிகக்ககூடியதாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .