Niroshini / 2021 நவம்பர் 11 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-விஜயரத்தினம் சரவணன்
பயிர் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக கமநல சேவைகள் நிலையங்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டால், விவசாயிகளுக்குரிய நட்டஈடுகளை வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுப்போம் என, முல்லைத்தீவு மாவட்ட கமநல சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையினால் நந்திக்கடலின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் நந்திக்கடல் பகுதிக்கு அருகேயுள்ள வயல் நிலங்கள் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.
இவ்வாறு நந்திக்கடல் நீரில் மூழ்கிப் பாதிப்படைந்துள்ள தமது பயிர்ச்செய்கைகளுக்கு உரிய நட்டஈடுகளை உரியவர்கள் வழங்க முன்வரவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பில் வினவிய போதே, அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தற்போது சின்னாற்றினுடைய முகத்துவாரமும் திறக்கப்பட்டு உள்ளதாகவும் நந்திக்கடலினுடைய முகத்துவாரமும் உடைப்பெடுத்துள்ளது எனவும் எனவே, நீர் வடிய ஆரம்பித்து இருக்கின்றது எனவும் கூறினார்.
நீர் முற்றாக வடிந்தவுடனேயே பாதிப்பு நிலைமைகள் குறித்து ஆராய முடியும் எனவும், அவர் தெரிவித்தார்.
'நெற்பயிர்கள் சற்று பெரிய அளவில் இருப்பதால், பயிர் நிலங்களில் நீர் தேங்கி இருந்தாலும், பயிர்கள் பெரிய அளவில் பாதிப்படைய வாய்ப்பிருக்காது.
'மேலும், இவ்வாறு பயிர்ச்செய்கைகளை நந்திக்கடல் நீர் மூடுகின்ற பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு என்ற விடயத்திலே, ஓரிரு திணைக்களங்கள் முடிவெடுக்க முடியாது. மாறாக, பல திணைக்களங்களோடு தொடர்புடைய விடயமாக அது காணப்படுகின்றது' என்றும், அவர் கூறினார்.
எனவே, இந்த விடயத்தில், மாவட்டச் செயலகத்தின் தலைமையில், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் அனைத்தும் இணைந்து கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதன் மூலமே ஒரு முடிவுக்கு வரமுடியும் எனவும், அவர் தெரிவித்தார்.
அதற்கு மக்களும் தமது தரப்பு யோசனைகளை, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு வரையில் கொண்டுசெல்ல வேண்டும் என்றார்.
30 minute ago
34 minute ago
47 minute ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
34 minute ago
47 minute ago
10 Nov 2025