2025 மே 23, வெள்ளிக்கிழமை

பயிற்சிப் பட்டறை

Editorial   / 2019 ஜூன் 22 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன் 

முல்லைத்தீவு மாவட்டத்தின் இளம் ஊடகவியலாளர்களை உருவாக்குகின்ற நோக்கோடு ஐ எல் ஓ நிறுவனத்தினுடைய அனுசரணையில், முல்லைத்தீவு மாவட்ட பெண் முயற்சியாளர் கூட்டுறவு சங்க ஏற்பாட்டில், வடமாகாண பெண்களை பொருளாதா ரரீதியாக வலுப்படுத்துவதன் ஊடாக சமாதானத்தை கட்டியெழுப்புதல் என்கின்ற செயல்  திட்டத்தினூடாக, 30 இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பத்திரிகையியல் தொடர்பான பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு வருகின்றது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஜீனு சிறுவர் பகல் பராமரிப்பு நிலையத்தில், குறித்த பயிற்சி வகுப்பானது கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, 15 16ஆம் திகதிகளில் நடைபெற்றது.

தெடார்ந்து, 23 24 25ஆம் திகதிகளிலும்  29, 30ஆம் திகதிகளிலும் நடைபெறவுள்ளது

வளவாளர்களாக அருட்திரு ரூபன் மரியாம்பிள்ளை அடிகளாரும் ஊடகவியலாளர் ஜெயம் ஜெகனும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X