2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பரந்தனில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் பலி

Niroshini   / 2022 ஜனவரி 02 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - பரந்த பகுதியில், நேற்று  (01) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற  வன்முறைச் சம்பவத்தில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை

செய்யப்பட்டுள்ளதோடு, மற்றோர் இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

பரந்தன் பகுதியைச் சேர்ந்த கார்திக் (வயது 24) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவரது
அக்காவின் மகன் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கார்திக்கை நான்கு பேர் கொண்ட குழுவினர் தலைக் கவசத்தினால் தாக்கிக்கொண்டிருந்த போது தான்   அதனை தடுக்க சென்றதாகவும் இதன் போது, தன்னை அவர்கள் கூரிய ஆயுதத்தால் வெட்டியதனால் தான் காயமடைந்தாகவும், பின்னர் அவர்கள்  கார்திக்கையும் வெட்டிக் கொலை செய்ததாகவும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும்  இளைஞன் தெரிவித்துள்ளார்.

இன்று (02), சம்பவ இடத்துக்கு கிளிநொச்சி பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின்  பதில் நீதவானும் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

குறித்த குற்ற செயலில் நான்கு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .