2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பரவிப்பாஞ்சான் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

George   / 2016 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களது காணிகள் இரண்டு வாரத்துக்குள் மக்களிடம் கையளிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பரவிப்பாஞ்சான் மக்களிடம் தெரிவித்தமைக்கு  இணங்க மக்கள் தமது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.

பரவிப்பாஞ்சான் பகுதி மக்கள் தமது காணிகளைத் தம்மிடமே வழங்குமாறு கோரி கடந்த ஐந்து நாட்களாகப் அவர்களது வாழ்விடங்களிலுள்ள இராணுவ முகாம்களுக்கு முன்னால் இரவு பகலாகத் தங்கியிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனை அடுத்து எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், பரவிப்பாஞ்சான் பகுதிக்கு இன்று புதன்கிழமை (17) சென்று மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

மக்ளுடன் கலந்துரையாடியதுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்சியுடன் தொடர்புகொண்டு பரவிப்பாஞ்சான் மக்களது காணி விடுவிப்புக் குறித்துப் உரையாடினார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்சியின் வாக்குறுதிக்கமைவாக இரண்டு வாராத்துக்குள் பரவிப்பாஞ்சான் மக்களது காணிகள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உறுதிமொழி வழங்கியதையடுத்து மக்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், ஈ.சரவணபவன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் சு.சுகிர்தன் ஆகியோர் உடனிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .