2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பரவிப்பாஞ்சான் மக்களுடன் சங்கரி சந்திப்பு

George   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமையுடன் (16) 4 ஆம் நாளாக இந்த போராட்டம் தொடர்ந்தது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, திங்கட்கிழமை (15) சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்து கொண்டார். பரவிப்பாஞ்சான் பகுதியில் உள்ள மக்களின் காணிகள் தொடர்பில் பார்வையிட்ட ஆனந்தசங்கரி, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுடன் கலந்துரையாடினார்.

இதன்பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆனந்தசங்கரி, 'பொதுமக்களின் காணிகளில் இராணுவம் குடியிருப்பது என்பது ஏற்க முடியாத ஒன்றாகும். குறித்த பரவிப்பாஞ்சான் கிராமம் கிளிநொச்சி மாவட்டத்தின் பழமைவாய்ந்த கிராமமாகும்' என்றார்.

'மக்கள் மீள்குடியேறியபோது குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தொடர்ந்தும் இராணுவம் குறித்த பகுதியில் இருப்பது ஏற்க முடியாத ஒன்றாகும். இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு வலியுறுத்தி வருகின்றேன். குறித்த பகுதி விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.

மக்களின் இப்போராட்டத்துக்கு என்னால் முடிந்த ஆதரவினையும் வழங்கவுள்ளேன். குறித்த போராட்டம் வெற்றி பெற வேண்டும்' என தெரிவித்த ஆனந்தசங்கரி, இதற்காக அரசாங்கத்திடமும் அரச அதிகாரிகளிடமும் பேசவுள்ளதாக கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .